Connect with us
Cinemapettai

Cinemapettai

kamal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் போனா போகட்டும், பெரிய நடிகரை நம்பி நாங்க இல்லை.. இளம் நடிகருடன் இணைந்த லைக்கா

லைகா நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து பெரிய நஷ்டத்தை சந்தித்து வந்தது. இருந்தாலும் ஒரு படம் விட்டால் இன்னொரு படம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே பெரிய பட்ஜெட்டில் தொடர்ந்து பட மெடுத்து வந்தனர்.

அப்படி எடுத்த பல படங்கள் அவர்களது கையில் சுட்டு விட்டது. இறுதியாக சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாக இந்தியன் 2 படமும் எப்போது முடியும் என்பது அவர்களுக்கே தெரியாத நிலை.

அப்படி பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள லைகா நிறுவனம் இனி முன்னணி நடிகர்களை நம்பி படம் எடுத்தால் வேலைக்கு ஆகாது என நல்ல நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை சின்ன சின்ன நடிகர்களை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாம்.

அந்த வகையில் நம்பிக்கை தரும் இயக்குனரான சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம் ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா மற்றும் சற்குணம் ஏற்கனவே சண்டிவீரன் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். விமர்சனங்களை பெற்ற அளவுக்கு அந்த படம் வசூல் ரீதியாக செல்லவில்லை. இந்நிலையில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் சற்குணம் உள்ளதால் இந்த படம் ஹிட்டடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லைகா நிறுவனத்திடம் அந்த இந்தியன் 2 படம் என்னாச்சு என கேட்டபோது, கமலஹாசனை நம்பி நாங்கள் இல்லை என ஒரே போடாக போட்டு தள்ளுகிறார்களாம். அதற்கு காரணம் அந்தப்படம் இனி வளரும் என்ற நம்பிக்கை யாருக்குமே இல்லையாம்.

atharvaa-cinemapettai

atharvaa-cinemapettai

Continue Reading
To Top