fbpx
Connect with us

Cinemapettai

நம்ப வச்சி கழுத்தறுத்த லைகா.. மொத்தத்தையும் ஆட்டைய போட்டு எஸ்கேப்.. இதான் மோசமான கார்பரேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நம்ப வச்சி கழுத்தறுத்த லைகா.. மொத்தத்தையும் ஆட்டைய போட்டு எஸ்கேப்.. இதான் மோசமான கார்பரேட்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம். ஆனால் காட்டில் அள்ளிட்டு போன இறைச்சியை பிரிச்சி கொடுக்குமா நரி. வாய்ப்பே இல்லை. அப்படித்தான் ஒரு நரி வேலையை செய்து வருகிறதாம் லைகா.

விபரம் தெரியாமல் கன்னாபின்னா விலைக்கு வாங்கிய விநியோகஸ்தர்கள் அந்த அளவு பணம் வரவில்லையாம். அந்த ஏரியாவில் முழு காட்சியும் புல்லாக ஓடினாலும் அந்த விலை வராதாம் ஆனால் தில்லாலங்கடி வேலை செய்து விற்பனை செய்து விட்டது லைகா. இதனால் நொந்து போய்க் கிடக்கும் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரை அணுகி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டிய நிவாரணம் கிடைக்காததால் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விநியோகஸ்தர்கள் முறையிட முடிவு செய்து அதிலும் தோல்வி தான்.

படம் வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்று செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒன்று கூடி பேசினார்கள்.

ரஜினிகாந்தை சந்திக்க முடியாததால் விரைவில் விநியோகஸ்தர்கள் தரப்பில் கலந்தாலோசித்து எந்தெந்த மாவட்டங்களில் படம் எவ்வளவு நஷ்டம் என்று முடிவெடுக்கப்பட்டு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து முறையிடவும் விநியோகஸ்தர்கள் முறையிட்டனர். ஆனால் எந்த ஒரு பயனும் இல்லை.

தற்போது இதில் புதிய திருப்பமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தை காரணம் காட்டி லைகா மொத்தமாக நாமம் போட்டு விட்டார்கள். விபத்தினால் சிரமத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பும் கூறுகின்றன.

இதனால் மிகவும் நொந்து போயுள்ளனர் விநியோகஸ்தர்கள். இந்தியன் 2 படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து தியேட்டர்கள் விநியோகஸ்தர்கள் வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
To Top