புதன்கிழமை, நவம்பர் 6, 2024

ரஜினி கமலை கண்மூடித்தனமாக நம்பிய லைக்கா.. விஜய் பக்கம் திரும்பாதது ஏன்? பளிச்சென்று சொன்ன ப்ளூ சட்டை

Rajini In Vettaiyan: முன்னணி நடிகர்களை வைத்து பெருத்த லாபத்தை பார்க்கும் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம் தமிழில் முதல் முறையாக தயாரித்த படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படம். கார்ப்பரேட் ஆக்கிரமிப்பால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் பிரச்சினையை சமாளிக்க குரல் கொடுக்கும் விதமாக இக்கதை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் 70 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கத்தி 128 கோடி லாபத்தை சம்பாதித்து லைக்கா நிறுவனத்திற்கு பெருத்த வசூலை அள்ளி கொடுத்திருக்கிறது. அடுத்ததாக ஒரு சில படங்களை தயாரித்த லைக்கா, ரஜினிக்கு முதன்முதலாக தர்பார் படத்தை தயாரித்து கொடுத்தது. அந்த வகையில் இப்படம் 240 கோடி அளவில் செலவு செய்யப்பட்டு தயாரித்தார்.

ஆனால் இதில் லாபம் ஒன்றும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப போட்ட காசை மட்டும் எடுக்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது. தர்பாருக்கு அடுத்தபடியாக ரஜினிக்கு மறுபடியும் லால் சலாம் படத்தையும் தயாரித்தது. ஆனால் இப்படமும் மிகப்பெரிய தோல்வியை தான் கொடுத்தது. கமலை வைத்து இந்தியன் 2 படத்தையும் தயாரித்தார். இந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தேறாமல் போய்விட்டது.

இதனை அடுத்து ரஜினி, ஜெய் பீம் இயக்குனருடன் கூட்டணி வைத்த வேட்டையன் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரித்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றதால் வணிக ரீதியாக லாபம் கிடைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமாக இருக்கிறது. தற்போது இதனை சுட்டிக்காட்டும் விதமாக ப்ளூ சட்டை பளிச்சென்று அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

blue sattai
blue sattai

அதாவது தமிழில் லைக்கா தயாரித்த முதல் படம் கத்தி பிரமாண்ட வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு விஜயுடன் ஏன் படம் பண்ண வில்லை என்று தெரியவில்லை. ஆனால் ரஜினி கமலை வைத்த எடுத்த தர்பார், லால் சலாம், இந்தியன் 2 தேறவில்லை. வேட்டையன் படமும் தேற வாய்ப்பில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்.

ரஜினியை கண்மூடித்தனமாக நம்பியதால் என்னமோ லைக்கா நிறுவனம் விஜய் பக்கம் திரும்பாமல் போய்விட்டது. ஆனால் நஷ்டம் யாருக்கு என்று தற்போது லைக்கா நிறுவனத்திற்கு நன்றாக புரிந்திருக்கும்.

- Advertisement -spot_img

Trending News