செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

துல்கருக்கு கை கொடுத்த லக்கி பாஸ்கர்.. தியேட்டர்ல மிஸ் ஆயிடுச்சா, ஓடிடி தேதியை நோட் பண்ணிக்கோங்க

Dulquer Salmaan Ott release Date: பண்டிகை நாட்கள் ஒட்டி எந்த படங்கள் வந்தாலும் முக்கால்வாசி அந்த படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவிடும். அதற்கு காரணம் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கு அனைவரும் போகும் ஒரு இடமாக திரையரங்கம் அமைந்து வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், மலையாள நடிகராக எல்லா பக்கமும் நடிப்பை பின்னி பெடல் எடுக்கும் துல்கர் நடிப்பில் லக்கி பாஸ்கர் படமும் வெளிவந்தது.

இதில் அமரன் படம் பட்டி தொட்டி எல்லாம் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இதே மாதிரி துல்கர் நடிப்பில் வெளிவந்த லக்கி பாஸ்கர் படமும் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்திருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வாயை மூடி பேசவும் படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்தது.

அடுத்ததாக மணிரத்னம் இயக்கிய ஓகே காதல் கண்மனி படத்தில் நடித்து ரொமாண்டிக் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படத்திலும் கமிட்டானார். இதில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஸ்டாக் மார்க்கெட் மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் குடும்ப ரசிகர்களை மொத்தமாக கவர்ந்திருக்கிறது.

அத்துடன் 100 கோடி மேல் வசூல் செய்து இப்படம் இப்பொழுது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் இப்படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணியவர்களும், மறுபடியும் பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களுக்கும் ஓடிடி மூலம் ரிலீஸ் ஆக தயாராகிவிட்டது. அந்த வகையில் வருகிற நவம்பர் மாதத்தில் 30-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வர இருக்கிறது.

- Advertisement -

Trending News