தமிழ் சினிமாவில் அந்தந்த காலங்களில் இரண்டு நடிகர்களை போட்டி நடிகர்களாக பார்ப்பர். சிவாஜி, எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை தொடர்ந்து வருகிறது.

இதில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருபவர்கள் சிம்பு, தனுஷ். சமீபத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் வெளியானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா ஆகியோர் நடித்த மயக்கம் என்ன படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறதாம்.

அதற்கான போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது