fbpx
Connect with us

வைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபயர் மலையாள பட டீஸர்.

லூசிபயர்

நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கும் படம் லூசிபயர். இந்த படத்தில் நடிகர் மோகன்லால் “ஸ்டீபன் நெடும்பல்லி” என்ற ரோலில் நடித்துள்ளார். அரசியல் தூக்கலாக இருக்கும் திரில்லர் படம் இது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். முரளி கோபி கதையை எழுதியுள்ளார். இசை தீபக் தேவ். ஒளிப்பதிவு சுஜித் வாசுதேவ். இப்படத்தில் விவேக் ஓபராய், இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ் நடித்துள்ளனர்.

Prithviraj Sukumaran

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் ஹீரோ, “செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியும், ஆனால் நான் இனிமேல் செய்யப்போகும் பாவங்களுக்கு ?” என்ற வசனத்துடன் மிக ஆக்ரஷமாக வெளியேறுகிறார் மோகன்லால்.

இப்படத்தின் டீசரை நடிகர் மம்மூட்டி இன்று காலை 9 மணிக்கு தன் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டார். மார்ச் மாதம் இப்படம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top