செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

லப்பர் பந்து இயக்குனர் வயிற்றில் அடித்த தயாரிப்பாளர்.. ஹரிச்சந்திரன் பரம்பரையா இருப்பாரோ?

சின்ன பட்ஜெட் படங்கள் கூட நல்ல கன்டென்ட் ஆக இருந்தால், மக்கள் நிச்சயம் வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த படம் லப்பர் பந்து. 50 நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடி, நல்ல வசூல் லாபத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு பெற்று கொடுத்தது. இந்த நிலையில், சமீபத்தில் லப்பர் பந்து தயாரிப்பாளர்களான லக்ஷ்மணன் மற்றும் வெங்கடேஷ்-க்கும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துக்கும் பெரிய தகராறு ஒன்று நடந்துள்ளது.

லப்பர் பந்து தியேட்டரில் சக்கை போடு போட்டது. சொல்லப்போனால், அந்த நேரத்தில் எத்தனையோ பெரிய படங்கள் வெளியானாலும் கூட, லப்பர் பந்துக்கு கூட்டம் குறையாத அளவுக்கு தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக்கொண்டு இருந்தது. அதுமட்டுமின்றி விமர்சனமும் நன்றாகவே இருந்தது. இந்த படம் படத்தில் பணியாற்றிய எல்லோருக்குமே ஒரு திருப்புமுனை படமாக இருந்தது.

வயிற்றில் அடித்த தயாரிப்பாளர்

இந்த நிலையில், தமஜிஹில் நல்ல வசூல் செய்ததனால், மற்ற மொழிக்கான ரைட்ஸ் நல்ல விலைக்கு விற்றுப்போயுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்கள் தயாரிப்பாளர்கள். இந்த விஷயம் எப்படியோ, இயக்குனருக்கு தெரியவந்துள்ளது. அந்த நேரம் பார்த்து தயாரிப்பாளர்களும் இயக்குனருக்கு கால் செய்து, ரைட்ஸ் 10 லட்சத்துக்கு விற்றுப்போயுள்ளது. உங்கள் பங்காக 40% வரும். 4 லட்ச ரூபாயை பெற்றுக்கொள்ளுங்கள் என்று தாராள மனதுடன் அழைத்துள்ளார்.

இதை கேட்ட இயக்குனருக்கு பயங்கர கோவம் வந்துவிட்டது. “நான் 2 கோடிக்கு விற்றுப்போயுள்ளது என்று கேள்விப்பட்டேன் ” என்று கேட்க, தொடர்ந்து தயாரிப்பாளர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதை கேட்டு, நொந்து போன, இயக்குனர் எனக்கு எந்த ஷேர்-வேண்டாம்.. நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.

இதை தொடர்ந்தாவது, தயாரிப்பாளர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று பார்த்தால், அப்போதும், “எழுதி கொடுத்து விட்டு போங்கள்..” என்று கூறியிருக்கிறார்கள். இதை தொடர்ந்து, எனக்கு எந்த பங்கும் வேண்டாம் என்று இயக்குனர் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். நல்ல படம் எடுத்த இயக்குனர் வயிற்றில் இப்படி அடித்திருக்கிறாரே என்று நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News