புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மாமியாரை விட வயது கம்மியான ஹரிஷ் கல்யாண்.. இது என்னடா புது மேட்டரா இருக்கே!

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி லப்பர் பந்து எல்லோரையும் கவர்ந்தது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.42 கோடிக்கு மேல் வசூல் குவித்து இப்படத் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றிக்கு இயக்குனர், கதை, நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரீஸ் கல்யாண் ஆகியோரும் முக்கிய காரணம்.

இப்படத்தில் தினேஷ், ஹரீஸ் கல்யாண் இடையே நடக்கும் ஈகோ, கிராமத்து வாழ்வியல், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் அமைந்த ஒவ்வொரு கேரக்டரும் கச்சிதமாக அமைந்து எல்லோராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருமகனைவிட மாமியாருக்கு வயது குறைவு

சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஹரிஸ் கல்யாணைவிட இப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாகவும், ஹீரோயின் சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு அம்மாவாகவும் நடித்த ஸ்வாசிகா விஜய்க்கு வயது குறைவு என்ற தகவல் வெளியாகி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ஹரீஸ் கல்யாணுக்கு வயது 34 ஆகும் நிலையில், ஸ்வாசிகாவுக்கு வயது 32 தான். ஆகிறது. ஆனால், இப்படத்தில் நல்ல கதையின் கதாப்பாத்திரத்தின் தேவை கருத்தி, இயக்குனரின் தன்னிடம் கதை சொன்னதைக் கேட்டு, யாருக்கு மாமியாராக நடிக்கிறோம் என்பதைக் காட்டிலும் தான் நடிக்கும் கேரக்டரின் நாம் எப்படி நடிக்கிறோம் என்று புரிந்துகொண்டு ஸ்வாசிகா இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கேரக்டர் எதுவானால் என்ன, நடிப்புதான் முக்கியம்!

ஆனால், தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரில் சிறப்பாக நடித்து இப்படத்தின் வெற்றிக்கு ஸ்வாசிகாவும் ஒரு காரணம் என்பதாலும் அவர் வயது குறைவு என்பதாலும் இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகள் குவியலாம் என தெரிகிறது. மேலும், சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடிக்கும்போது, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வயதைக் காட்டிலும் கூடுதல் வயதுள்ள கேரக்டரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News