Sports | விளையாட்டு
வெறும் 47 ரன்களுக்கு ஆல் அவுட்.. ஐபிஎல்லில் இதுதான் குறைந்த ஸ்கோர்! ரொம்ப மோசம்
ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவில் மூன்று அணிகள் மோதும் மகளிர் டி20 சேலஞ்ச் எனும் மினி டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
வெலாசிட்டி – ட்ரெயில்பிளேசர்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது லீக் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெலாசிட்டி அணி 47 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.சோபி எக்கிளேஸ்டோன் 4 விக்கெட்கள் வீழ்த்தி மிரள வைத்தார்.
மிதாலி ராஜ் கேப்டனாக இருக்கும் வெலாசிட்டி அணிக்கு ஷபாளி வர்மா – டேனியல் வியாட் துவக்கம் அளித்தனர். 3வது ஓவரில் ஷபாளி வர்மாவை வீழ்த்தி கோஸ்வாமி முதல் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
பின் இங்கிலாந்து வீராங்கனை சோபி தன் சுழற் பந்துவீச்சு மூலம் வெலாசிட்டி அணியை மிரள வைத்தார். மிதாலி ராஜ் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 0, சுஷ்மா வர்மா 1 என வரிசையாக பெவிலியன் திரும்பினர்.
15.1 வெலாசிட்டி அணி ஆல் அவுட் ஆனது. பின் 48 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய, ட்ரெயில்பிளேசர்ஸ் அணி 7.5 பந்தில் வெற்றி இலக்கை அடைந்தது.
மேலும் சோபி லாக்டவுனில் தான் பெற்ற சிறப்பான பயிற்சி தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

ipl 2020
