புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்தியாவில் விற்கப்படும் தரம் குறைந்த உணவு பொருட்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

India : சமீபகாலமாகவே ஹோட்டல் போன்ற பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு தரம் இல்லாத உணவுகளை தயாரிக்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் சவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டதால் சில இறப்புகளும் சந்தித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்த சூழலில் சமீபத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த ATNI நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் தர மற்ற பொருட்கள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அன்றாட வாழ்க்கையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பொருட்கள் இதில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாகவே குளிர்பானங்களில் சில நிறுவனங்கள் தரமற்று இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பி இருந்தது. அந்த வகையில் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் இந்தியா போன்ற சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தங்களது தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்கள்

அந்த வகையில் Nestle, Pepsico, Unilever போன்ற பொருட்கள் தர மற்று இருப்பதாக ANTI அமைப்பினர் ஆய்வு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இவ்வாறு தரமற்ற உணவுகளை அனுமதிக்கப்பட்டதற்கான சில காரணங்களும் இருக்கிறது.

அதாவது ஆரோக்கியமான உணவு என்றால் ஐந்து மதிப்பெண்களுக்கு 3.5 மதிப்பெண்களுக்கு மேலாக தான் இருக்க வேண்டும். ஆனால் சில குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உணவுப்பொருட்கள் ஐந்து மதிப்பெண்களுக்கு வெறும் 1.8 ஆகவே இருக்கிறது.

ஆகையால் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சுலபமாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தான் இந்தியாவில் இது போன்ற பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

- Advertisement -

Trending News