Entertainment | பொழுதுபோக்கு
லோ பட்ஜெட்டில் வசூலை வாரி குவித்த 6 படங்கள்.. சின்ன கல்லு பெத்த லாபம்!
சினிமாவை பொறுத்தவரை பல இயக்குனர்கள் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் படங்களை எடுத்துள்ளனர். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் படத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்து குறைந்த செலவில் மிகப்பெரிய லாபம் தரக்கூடிய அளவுக்கு படங்களை எடுத்துள்ளனர். அப்படி குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வசூல் சாதனை படைத்த படங்களைப் பற்றி பார்ப்போம்.
அன்னக்கிளி

annakili
1970 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் இளையராஜா இசையமைத்த முதல் படமாகும். 4 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் வசூல் சாதனை படைத்தது.
16 வயதினிலே

16 vayathinile
16 வயதினிலே படத்தின் மொத்த செலவு 4 லட்ச ரூபாய். இப்படத்திற்கு கமல்ஹாசன் சம்பளமாக 20000 ரூபாயும் ரஜினி சம்பளமாக 30,000 ரூபாய் கேட்டாராம் ஆனால் 30 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டது. கிட்ட தட்ட 50 லட்ச ரூபாய் வசூல் சாதனை படைத்தது.
ஒரு தலை ராகம்

oru thalai ragam
1980 ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் திரைப்படம் எல்லோருமே புது முகத்தை வைத்து எடுத்திருந்தனர். இப்படம் 3 லட்சம் செலவில் எடுக்கப்பட்டு பின்பு 15 லட்சம் ரூபாய் வசூல் சாதனைபடைத்தது.
கேளடி கண்மணி

keladi kanmani
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் கேளடி கண்மணி. கதாநாயகனாக எஸ்பிபி பாலசுப்பிரமணியம் மற்றும் ராதிகா கதாநாயகியாக நடித்து இருந்தனர். கம்மி பட்ஜெட்டில் மிகப்பெரிய லாபம் கொடுத்த திரைப்படம் இதுதான்.
புது வசந்தம்

puthuvasantham
1990 ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் திரைப்படம் 28 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டு பின்பு 1 கோடி வசூல் எடுத்தது.
சுப்ரமணியபுரம்

subramaniyapuram-cinemapettai
சசிகுமார் இயக்கத்தில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம் படம் 2 கோடி செலவில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் லாபம் எடுத்தது.
நாடோடிகள், பிறந்த வீடு புகுந்த வீடு, ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற படங்கள் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன.
