இறுக்கி அணைத்து ‘லிப் லாக் உம்மா’.. சோகத்தில் முடிந்த காதலர்களின் இன்பம்

லிமா: 60 அடி உயரமுள்ள பாலத்தில் கட்டிப்பிடித்து லிப் லாக் முத்தம் கொடுத்து கொண்டிருந்த காதல் ஜோடி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரு நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டைச் சேர்ந்தவர்கள் மேபெத் எஸ்பினாஸ் – ஹெக்ட்டார். இருவரும் தீவிரமான காதலர்கள். பெத்தலஹேம் என்ற 60 அடி உயரமுள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது காதலன் ஹெக்ட்டார், தனது காதலியை தூக்கி பாலத்தின் தடுப்பு கம்பி மீது ஏற்றி உட்கார வைத்தார். பிறகு இருவருமே ஒரு கட்டத்தில் ஒருத்தருக்கொருவர் லிப் லாக் முத்தம் கொடுத்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் காதலி, ஹெக்ட்டாரை தன் காலுக்குள் இழுத்து கொண்டு வந்து வைத்து, உதட்டில் அழுத்தமாக முத்தம் தந்தார்.

அப்போது, இருவரும் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பிறகு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

Leave a Comment