fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

காதலர் தினத்தில் காதலியுடன் ஜாலி! இரண்டாவது காதலை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால் காதலி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதலர் தினத்தில் காதலியுடன் ஜாலி! இரண்டாவது காதலை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால் காதலி

அண்மைக்காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த நடிகர் விஷ்ணு விஷால் திடீரென குடிபோதை, விவாகரத்து, காதல் சர்ச்சை என ஆளே மாறி ஒரு மாதிரியாகி போனார். இந்நிலையில் அதில் இருந்து மீண்டு வந்த அவர் தற்போது பழைய படி சினிமாவில் நடித்து வருகிறார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் வெளியான, ராட்சசன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உச்ச நட்சத்திரமாக உயருவார் என்று பார்த்தால் திடீரென ஆளை காணாம்.

கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்தார். ஒரு மகன் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சட்டப்படி விவாகரத்து செய்தார்.

v-vishal

v-vishal

அதன் பிறகு குடிபோதையில் சிக்கி கடும் விரக்தியில் இருந்தார். பின்னர் அதில் இருந்து மீண்டு புது மனிதனாக வந்தவர். இந்நிலையில் பிரபல பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனால் தான் விவாகரத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அதுதொடர்பாக விஷ்ணு விஷால் பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இருப்பினும் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்கும் போட்டோக்களும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது. விஷ்ணு விஷாலை ஜூவாலா கட்டா கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

vishnu-vishal

vishnu-vishal

இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தை விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் கொண்டாடியுள்ளனர்.

அப்போது ஜூவாலா கட்டா விஷ்ணு விஷாலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுதிருக்கிறார். முத்தம் கொடுக்கும் போட்டோ லைக் செய்த நடிகர் முத்தம் கொடுக்கும் அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் ஜூவாலா கட்டா.

vishnu-vishal

vishnu-vishal

மேலும் மை வேலன்டைன் என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை நடிகர் விஷ்ணு விஷால் லைக் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vishnu-vishal

vishnu-vishal

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top