லால் சலாமுக்கு தண்ணி காட்டும் லவ்வர்.. 2ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Lal Salaam And Lover Collection Report: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் கடந்த 9ம் தேதி வெளியானது. கௌரவ தோற்றமாக இருந்தாலும் இது ரஜினி படம் தான் என ரசிகர்கள் இப்படத்தை காண பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர்.

மேலும் தியேட்டர்களில் ரஜினிக்கு கட்டவுட் வைத்து சென்னையே அமர்க்களமாக இருந்தது. இந்த பரபரப்புக்கு இடையில் மணிகண்டனின் லவ்வர் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆனது. இதனால் இந்த இரு படங்களில் எந்த படம் வசூலை வாரி குவிக்கும் என்ற ஆர்வம் திரையுலகில் சற்று அதிகமாக காணப்பட்டது.

அதேசமயம் லால் சலாம் நிச்சயம் 100 கோடி கிளப்பில் இணையும் எனவும் சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். இப்படி கடும் விவாதங்களுக்கு மத்தியில் வெளியான இந்த இரண்டு படங்களில் லால் சலாம் முதல் நாளில் 4.5 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது.

Also read: லால் சலாம் படத்தில் இவ்வளவு குறையா?. இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்னும் கத்துக்க வேண்டிய விஷயம்

ஆனால் வார இறுதியில் இந்த வசூல் அதிகமாகும் என்று கூறப்பட்டது. அதற்கு நேர் மாறாக இரண்டாவது நாளிலும் லால் சலாம் சரிவை தான் சந்தித்தது. அதன்படி நேற்று இப்படம் வெறும் 3 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.

ஆனால் லவ்வர் முதல் நாளில் ஒரு கோடியும் இரண்டாம் நாளில் 1.5 கோடியும் வசூலித்து கெத்து காட்டியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தைப் பார்க்கும் கூட்டமும் சற்று அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

அதன்படி மூன்றாவது நாளில் லவ்வர் நிச்சயம் இரண்டு கோடியை வசூலித்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பட குழு தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சலாம் படகுழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்த்து கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.

Also read: தியேட்டரையே தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்.. அள்ள அள்ள குறையாத லால் சலாம் முதல் நாள் வசூல்

Next Story

- Advertisement -