Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வயசுக்கு வந்த பெண்ணை வச்சிக்கிட்டு கோவாவில் ஹனிமூன் கொண்டாடும் வனிதா.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து பெற்று மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களது திருமணத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், இவர்கள் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலை கொள்ளாமல் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர் .

அந்த வகையில் வனிதா தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் காதல் ரசம் பொதிந்துள்ள இந்த போட்டோக்களை பார்த்த  சமூக வலைதள வாசிகள் பெருமளவில் கிண்டலடித்து வருகின்றனர்.

அதாவது தற்போது லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வனிதா தனது 40-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கோவாவில் கொண்டாடினார். 

அந்த வகையில் தன்னுடைய காதல் கணவர் பீட்டருடன்  காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு, இளம் ஜோடிகளை தட்டித் தூக்கி இருக்கிறார் வனிதா.

இந்த ரொமாண்டிக் லூட்டியை பார்த்து வனிதாவை பலர் கிழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதேநேரத்தில் வனிதாவின் ஆதரவாளர்களோ தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top