திருமணம் வரை சென்று பாதியில் பிரிந்த நடிகைகள்.. நண்டு கொழுத்தால் வலையில் தங்காதது சரிதான்

சினிமா பிரபலங்கள் சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் பிரபலமாகவே இருக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகளை சந்தித்து பாதிலேயே நின்றுபோன காதல் ஜோடிகளின் கல்யாணத்தை பார்க்கலாம்.

பிரபுதேவா மற்றும் நயன்தாரா:

பிரபுதேவா மற்றும் நயன்தாராவுக்கு இடையே ஏற்பட்ட காதல் கல்யாணம் வரை சென்றது, ஆனால் பிரபுதேவாவின் மனைவி காவல்துறையினரிடம் புகார் அறிவித்ததால், இந்த கல்யாணம் நின்று போனது. மீண்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் தற்போது வரை லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.

சமந்தா மற்றும் சித்தார்த்:

சில வருடங்களுக்கு முன் சமந்தா மற்றும் சித்தார்த்துக்கு இடையே காதல் கை கூடியது, இது கல்யாணம் வரை கூட சென்று சில பிரச்சினைகளால் அதாவது சமந்தாவுக்கும் நாக சைதன்யாவிற்க்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருந்ததால் சித்தார்த் இதிலிருந்து விலகிக் கொண்டார் என்று செய்திகள் வந்தது.

சிம்ரன் – ராஜுசுந்தரம்:

சிம்ரன் மற்றும் ராஜ் சுந்தரத்திற்கு இடையே ஏற்பட்ட காதல் கல்யாணம் வரை சென்றது, ஆனால் சிம்ரன் மற்றும் கமலஹாசனுக்கு இடையே நெருங்கிய உறவு இருந்ததாக ராஜுசுந்தரம் விலகிச் சென்று விட்டார் எனவும் அந்த காலத்தில் செய்திகள் வந்தது.

த்ரிஷா மற்றும் வருண் மணியன்:

த்ரிஷா மற்றும் வருண் மணியன் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் வரை போய்க் கல்யாணம் நின்றுவிட்டது. ஏனென்றால் சினிமாவில் பலருடன் பழகும் வாய்ப்பு இருப்பதால் த்ரிஷா மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் இவர்கள் கல்யாணமும் நிறுத்தப்பட்டது, அவருடன் வாழ முடியாது என்று விலகி விட்டாராம் த்ரிஷா.

சிம்பு மற்றும் ஹன்சிகா:

சிம்பு மற்றும் ஹன்சிகா இடையே ஏற்பட்ட காதல் கல்யாணத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது குஷ்பூ ஹன்சிகாவை பிரைன் வாஷ் செய்ததாகவும், இதனால் ஹன்சிகா சிம்புவை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார் என்றும் செய்திகள் வந்தது.

அசின் மற்றும் சல்மான் கான்:

அசின் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட காதல் கல்யாணப் பேச்சை எடுத்தவுடன் அசினின் தந்தை மறுத்துவிட்டதால் முடிவுக்கு வந்தது.

ஸ்ரீகாந்த் – சுவாதி:

வான்மதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவாதி நடித்திருப்பார், அவர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து கல்யாணம் நடப்பதாக இருந்தது ஆனால் வரதட்சணை அதிகமாக கேட்டதால் அதுவும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

விஜயலட்சுமி:

அடுத்து நாம் பார்க்க போவது விஜயலட்சுமி, பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருப்பார். விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் கல்யாணம் நடக்க இருந்தது ஆனால் பாதியில் பிரச்சனையில் முடிந்தது. பிரபுவும் குஷ்புவும் கூட இணைய வேண்டியது ஆனால் யார் கண் பட்டதோ பாதியில் முடிந்தது.

Leave a Comment