Connect with us
boomerang-movie

பரிச்சை பேப்பரில் காதல் கவிதைகள்..! மாணவர்களின் லீலைகள்…

school_cinemapettai

பரிச்சை பேப்பரில் காதல் கவிதைகள்..! மாணவர்களின் லீலைகள்…

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள பால்குர்கத் சட்ட கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து, மாணவர்களின் பரீட்சை பேப்பர்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில், சில மாணவர்களின் பரீட்சை பேப்பர்களில் இந்தி சினிமா பாடல்கள் மற்றும் காதல் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

சுமார் 10 மாணவர்களின் பேப்பர்களில் இது போன்ற கவிதைகள் மற்றும் பாடல்களை கண்ட ஆசிரியர்கள், அதிர்ச்சியுடன் மாணவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் மாணவர்களின் மேல் உள்ள குற்றம் உறுதியானதால் அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து, விளக்கம் அளித்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பொதுவாக ஒழுங்கின்மை செயல்களில் ஈடுபடும் மாணவர்களை மட்டும் தான் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். ஆனால், இந்த மாணவர்கள் தேர்வுகள் மீதான மாண்புகளை குலைத்து விட்டதால் ஓராண்டு சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சஸ்பெண்ட் காலம் முடிந்தாலும் இந்த மாணவர்கள் மீண்டும் மறு அட்மிஷன் செய்து இரண்டாண்டுகள் மீண்டும் பயில வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top