காலகேய மன்னனாக நடித்த பிரபாகர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர். படிப்பில் ஆர்வம் இல்லை. காக்கி நாடாவில் மில்லில் சூபர்வைசர் வேலைக்கு போனார். ஆறு மாதங்களே இருந்தார். விசாகபட்டினம் போனார். ஹார்பர் வேலை அங்கு மூன்று மாதம். கல்யாணம் என்று ஊருக்குப் போனார். அத்தை மகள் மறுத்தார் . “உன்னை பிடிக்கவில்லை ” என்று நேரடியாக கூறி விட்டார்.

வாழ்கையே வெறுத்து இருந்த நேரத்தில் நண்பர் பிரசாத் என்பவர் “ஹைதராபாத் வா ஏதாவது பண்ணாலம்” என்று கூற வீட்டில் சொல்லாமல் கிளம்பிட்டார். பிரசாத் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். பிரசாத் போகும் ஷூட்டிங் எல்லாம் இவரும் போனார். சாப்பாடு இல்லை. பின்பு துணை நடிகருக்கான யூனியன் கார்ட் வாங்கினார். தினமும் ஐநூறு ரூபாய் பாதி நாட்கள் ஷூட்டிங் இருக்காது. சோறும் இல்லை இந்த நேரத்தில்தான் பாகுபலி  உருவானது. வழக்கம் போல போட்டோ கொடுத்து விட்டு வந்தார். ஒரு மாதம் கழித்து ராஜமௌலி ஆபீசில் இருந்து போன்.

ராஜமௌலி பிரபாகரைப் பார்த்தார். “ஆறு மாசம் என் கூடவே இருக்கணும் ஓகேவா” என கேட்க ஒரு மாசமா கொஞ்சம் யோசித்தவர் சரி என்று கூறி விட்டார். மேகப் டெஸ்ட் எடுத்தார்கள். ஏற்கனவே நாம அழகு இதுல இப்படி கொடூரமாக மாத்துறாங்களே என்று வேதனை பட்டார் நடித்தார். பாகுபலி வெளியானது. ஆந்திராவே கொண்டாடியது. பிரபாகர் படு பிசி. கல்யாணம் செய்து கொண்டு போன பிரபாகரின் மாமா மகள் இப்போது அழுகிறாள்.