அது நடந்தே விட்டது என்று காதைக் கடிக்கிரார்கள் கோடம்பாக்கம் குருவிகள். என்ன நடந்துச்சு விளக்கமா சொல்லுங்கப்பா என்றோம்..!

அந்த நடிகை மிக மிக நல்லவர், இரக்க குணம் உள்ளவர்..! உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர்..!

ஆனால் காதல் மட்டும் கை கூடவே இல்லை..! எல்லோரும் அவரிடம் வசதிக்காகவே பழகுகிறார்கள்.

ஆனால் அந்த இலகிய மனம் கொண்ட நடிகை, எல்லோரையும் நம்பி விடுகிறார். அவரது உதவியாளர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்துள்ளார்.

அவரது மேனேஜர், பி.ஆர்.ஓ என அனைவருக்கும் நிறைய செய்துள்ளார். அவரிடம் ஒரு உதவியாளர் உண்டு..நிழல் போல தொடர்பவர்.

ஹீரோயினின் அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். இன்னும் சொல்லப் போனால் ஹீரோயினின் போன்களை ஆன் பண்ணுவது,மெசேஜ் அனுப்புவது அனைத்தும் அவர்தான்.

நடிகையின் அனைத்து பாஸ்வேர்ட்களும் அவருக்கு தெரியும். ஹீரோயின் இல்லாத நேரங்களில் அவரின் மொபைல் போன்களின் ரகசியங்களை காதலருக்கும், முன்னாள் காதலர்களுக்கும் லீக் செய்து விட்டாராம்.

கொதித்து போனார் நடிகை. நாலு சாத்து சாத்தி போலீசிடம் ஒப்படைத்து விட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்..!

நம்பிக்கை முக்கியம் அதைவிட நம்பிக்கையை காப்பாற்றுவது மிகவும் முக்கியம்