Tamil Cinema News | சினிமா செய்திகள்
9ம் கிளாஸ்லயே லவ் வந்துச்சு.. ஆனால் பிரேக் அப் ஆயிடுச்சு.. ரகசியத்தை வெளியிட்ட கண்ணழகி
நடிகை பிரியா வாரியர் தன்னுடைய காதல் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்த இவர். அதில் தனது புருவத்தை தூக்கி சக மாணவனை பார்த்து கண்ணடிப்பார்.
இந்த காட்சியால் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஒற்றை காட்சியால் பிரியா வாரியார் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். அனைத்து மொழி ரசிகர்களும் யார் இவர் இன்று நெட்டில் நோண்டாத நாளில்லை.
இதை பார்த்த தயாரிப்பாளர்கள் ஒரு அடர் லவ் படத்தை மலையாளம் தாண்டி, தெலுங்கு, தமிழ், உள்பட பல்வேறு மொழிகளில் எடுத்தார்கள். ஆனால் படம் பெரிதா கல்லாகட்டவில்லை.
இது ஒருபுறம் எனில் ஸ்ரீதேவியின் பங்களா படத்தின் டிரைலரில் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அதுவும் பெரும் பிரச்னையானது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரியா வாரியார் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்திருக்கிறார். அந்த பேட்டியில் தான் 9 ஆம் வகுப்பு படித்தபோது ஒரு பையன் தன்னிடம் காதலை சொன்னதாக கூறியிருக்கிறார்.
தானும் அந்தக் காதலை ஏற்றுக்கொண்டு ஒருவரையொருவர் காதலித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். பின்னர் நாளடைவில் அது ஒரு இன கவர்ச்சி என்பதை இருவரும் புரிந்து கொண்டு பிரிந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
