Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஞ்சலியுடன் ப்ரேக் அப்.. உறுதி செய்த நடிகர் ஜெய்

அஞ்சலியுடனான காதல் பிரிந்து விட்டதை, நடிகர் ஜெய் அவருக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாமல் உறுதிப்படுத்தி இருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் அறிமுகமானவர் ஜெய். அப்படத்தில் விஜயிற்கு தம்பியாக நடித்தார். அவரை போலவே ஜெய்யும் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து, சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படம் அவருக்கு மாஸ் ஹிட்டாக அமைந்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பார்ட்டி, ஜருகண்டி, நீயா 2 உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இவருக்கும், நடிகை அஞ்சலிக்கு காதல் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் பற்றிக்கொண்டது. அதை தொடர்ந்து, தனிமையில் அடிக்கடி சந்திப்பதும், நட்சத்திர ஓட்டல்களில் ஜோடியாக விருந்து சாப்பிடுவதுமாக காதலை வளர்த்தனர். தொடர்ந்து, இருவரும் பலூன் படத்தில் நடித்தனர். படப்பிடிப்பில் ஜோடியாக வலம் வந்ததாக, படக்குழு தரப்பில் தகவல் வெளியானது. நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தனர்.
அதன்பிறகு அஞ்சலி தெலுங்கு படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியதால் அவர்கள் சந்திப்பது குறைந்தது. அதுவே நாளடைவில் பிரிவை ஏற்படுத்தியது. இருவரும் தகராறு செய்து காதலை முறித்துக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அஞ்சலி பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவிக்காமல், காதல் முறிவை உறுதிப்படுத்தி இருக்கிறார். கடந்த வருட பிறந்தநாளுக்கு, ரொமான்ஸாக ட்வீட் தட்டி வைரலானது குறிப்பிடத்தக்கது.
