திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

பிக் பாஸ் வீட்டுக்குள் காதலிக்க தயாரான ஜோடி புறா.. ஒவ்வொரு சீசனிலும் சுவாரசியம் இருக்கோ இல்லையோ இது இருக்கு

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து நேற்று வரை 36 நாள் முடிந்து இருக்கிறது. அந்த வகையில் எப்பயாவது சுவாரஸ்யம் வரும், ஏதாவது பஞ்சாயத்து ஏற்படும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டிருக்கிறது. அதில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை பார்க்கும் பொழுது இந்த சீசனிலும் ஒரு லவ் கன்டென்ட் தயாராகி விட்டது என்பதற்கு ஏற்ப தெரிகிறது.

அதாவது வெளியே தீபக், முத்துக்குமரன், சௌந்தர்யா, அன்சிதா, பவித்ரா அனைவரும் காதல் கதையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ரயான் அங்கே வருகிறார். வந்ததும் சௌந்தர்யவை பார்த்து நீயும் லவ் பண்றியா என்று கேட்கிறார்.

உடனே சௌந்தர்யா தலைகுனிந்து வெட்கப்பட ஆரம்பித்து விட்டார். சௌந்தர்யா வெட்கப்படுவதை பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் யாரையோ லவ் பண்றாங்க போல தெரிகிறது. அது மட்டுமில்லாமல் ரயானுக்கும் சௌந்தர்யா மீது ஒரு உணர்வு ஏற்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதும் தனியாக நடந்து கொள்வதும் பார்க்கும் பொழுது கூடிய விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் இவர்களுடைய காதல் வெளிவந்து விடுவது போல் தெரிகிறது. எல்லா சீசனிலும் எப்படியாவது ஒரு லவ் கன்டென்ட் வந்து விடும்.

அதே மாதிரி இந்த சீசனிலும் ஜோடி புறாக்களாக சௌந்தர்யா மற்றும் ரயான் சுற்ற போகிறார்கள். ஏற்கனவே இவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருக்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டால் இதுவே மக்களிடத்தில் பேசும் பொருளாக இவர்களுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News