fbpx
Connect with us

Cinemapettai

அட்லீ கனவில் மண்ணை போட்ட ஷாருக்கான்.. கொஞ்சம் ஓவராத்தான் போய்டமோ என தூங்க முடியாமல் வேதனை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ கனவில் மண்ணை போட்ட ஷாருக்கான்.. கொஞ்சம் ஓவராத்தான் போய்டமோ என தூங்க முடியாமல் வேதனை

நான் ஜெயிலுக்குப் போறேன், நா ஜெயிலுக்குப் போறேன், நானும் இனிமேல் பெரிய ரவுடி தான் என வடிவேலு கூறும் வசனத்தை போல நானும் பாலிவுட் போறேன், பாலிவுட் போறேன், நானும் பெரிய டைரக்டர் தான் என நினைத்த அட்லீயின் கனவில் மண்ணைப் போட்டு விட்டாராம் ஷாருக்கான்.

அட்லீ இதுவரை தமிழில் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. விஜய்யின் இந்த வளர்ச்சிக்கு அட்லீயின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் மிகையாகாது. அந்த அளவு உலகம் முழுவதும் தளபதி விஜய்யின் மார்க்கெட்டை விரிவுபடுத்தியவர்.

இந்நிலையில் பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யை வைத்து அட்லீ படம் இயக்குவார் என செய்திகள் வெளியான நிலையில் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்க ரெடியாகி வருவதாக செய்திகள் வெளியாகியது.

அவரும் அந்த செய்தியை அவ்வப்போது தன்னுடைய சினிமா வட்டாரங்களில் இருந்து கசியவிட்டு இருந்தார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கேப்பில் அட்லீ பற்றி சாருக்கான் ரொம்ப யோசித்து விட்டார் போல. இதனால் தற்போதைக்கு அட்லீ உடன் படம் செய்வதில்லை என்ற முடிவில் உள்ளாராம்.

ஊரடங்கு உத்தரவால் பல நடிகர் நடிகைகளும் தங்களது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடி வருகின்றனர். அந்தவகையில் ரசிகர் ஒருவர் ஷாருக்கான் இடம் உங்களின் அடுத்த படத்தின் இயக்குனர் அட்லீயா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு என்னைப் பற்றி எழுதப்படும் அனைத்து கதைகளையும் உங்களுக்கு தருகிறேன் எனவும், கவலைப்படாதீங்க நிறைய படங்கள் பண்ணலாம் எனவும் கூறியுள்ளார்.

tweet-shahrukh

tweet-shahrukh

ஷாருக்கான் கதை என்று குறிப்பிட்டது அட்லீயுடன் ஷாருக்கான் படம் செய்ய இருந்த தகவல் பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்ததாக நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top