fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக்பாஸில் அடுத்த 2 வாரங்களில் நடக்கபோகும் தரமான சம்பவம்.. பொட்டிய கட்ட போவது இவரா?

kamal-bb5

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் அடுத்த 2 வாரங்களில் நடக்கபோகும் தரமான சம்பவம்.. பொட்டிய கட்ட போவது இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் இரண்டே வாரத்தில் நிறைவடைந்துள்ளது. எனவே வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில் இனி வரும் நாட்களில் போட்டியானது மிகக்கடுமையாக நடைபெற உள்ளதால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ராஜு, நிரூப், பிரியங்கா, தாமரைச்செல்வி, பாவனி, சிபி ஆகியோர் தங்களது வெறித்தனமான ஆட்டத்தை காட்ட கொண்டிருக்கின்றனர்.

இவர்களைத் தவிர பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அமீர் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்ற நேரடியாக பைனல் ரவுண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் யார் பைனலுக்கு செல்ல உள்ளனர் என்ற போட்டி இந்த வாரம் நிகழ உள்ளது.

அத்துடன் கடந்த இரண்டு வாரங்களாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இந்த வாரமும் அதே போல் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மாலைகளைக் கொடுத்து, யார் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புகிறீர்களோ, அவர்களுக்கு இந்த மாலையை அணிவிக்க வேண்டும் என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

இதில் யார் கழுத்தில் அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்று விடுவார்கள். இதற்காக பிக்பாஸ் வீட்டில் தற்போது காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அமீர்-தாமரைச்செல்வி இடையே கடுமையான விவாதம் திகழ்கிறது.

அதேபோல் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்கும் வாக்குவாதம் நிகழ்கிறது. அத்துடன் வரும் நாட்களில் பிக் பாஸ், 5 லட்சம் பரிசுத் தொகையை கொடுத்து அதை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்ற வாய்ப்பை போட்டியாளர்களுக்கு தருவார்.

எனவே அந்த வாய்ப்பை நிச்சயம் தாமரை தேர்வு செய்வார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு அமீர் மற்றும் ராஜு இருவரும் செல்ல உள்ளனர் என்றும், இவர்கள் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளராக இருக்க முடியும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ஆகையால் மீதமிருக்கும் 4 போட்டியாளர்களும் இனி வரும் வாரத்தில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இன்னும் 2 வாரத்தில் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நிறைவடைய் உள்ளதால் போட்டிக் களம் தற்போது இருந்தே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top