விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் தொழில் வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார். 2010இல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார்.ஆனால் இப்பொழுது மாறிவிட்டது.

விஜய் சேதுபதி படம் என்றாலே நம்பி போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வருடமே கவண், விக்ரம் வேதா என இரண்டு படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.vijaysethupathi

இந்நிலையில் இந்த இரண்டு வருடங்களில் விஜய் சேதுபதி 6 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார், வேறு எந்த ஒரு நடிகரும் இப்படி ஒரு சாதனையை கடந்த 10 அல்லது 15 வருடங்களில் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஹிட் படங்கள்…Vijay Sethupathi_Bollywood

2016

சேதுபதி
காதலும் கடந்து போகும்
தர்மதுரை
ஆண்டவன் கட்டளை

2017

கவண்
விக்ரம் வேதா