இளையராஜா தான் ஒரு வருடத்திற்கு 10ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வந்தார். அதை தொடர்ந்து வந்த ரகுமான், ஹாரிஸ் எல்லாம் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் தான் இசையமைத்தனர்.

யுவன் வருடத்திற்கு குறைந்தது 5 படங்கள் இசையமைப்பார், இந்நிலையில் சமீபத்தில் இசைத்துறையில் கலக்கி கொண்டிருக்கும் சந்தோஷ் நாரயணன் கையில் இந்த வருடம் 10 படங்கள் உள்ளதாம்.

அதிகம் படித்தவை:  ரஜினி நடிக்கும் ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

இதில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, விஜய்யின் 60வது படம், தனுஷின் கொடி, சந்தானத்தின் சர்வர் சுந்தரம், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும், கார்த்திக் சுப்புராஜின் இறைவி, கார்த்தி நடிக்கும் காஷ்மோரோ, உதயநிதியின் மனிதன், மேலும் பெயரிடாத படம் என மொத்தம் 10 படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.