Connect with us
boomerang-movie

நெருக்கமானவர்களால் மணிரத்னம் பட வாய்ப்பை இழந்த பிரபல வாரிசு நடிகை

maniratnam

News | செய்திகள்

நெருக்கமானவர்களால் மணிரத்னம் பட வாய்ப்பை இழந்த பிரபல வாரிசு நடிகை

லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா மணிரத்னம் பட வாய்ப்பை இழந்தது தன் திரை வாழ்வில் பெரும் தடையாக அமைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் லட்சுமி. இவரின் தாய் குமாரி ருக்மணியும் பாகவதர் காலத்தில் பிரபல நடிகையாக இருந்தார். எனவே இவரின் திரை நுழைவும் சாதாரணமாக அமைந்து விட்டது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பாஸ்கர் என்பவரை தனது 17வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆனால், தாய் லட்சுமிக்கு கிடைத்த அந்த வரவேற்பு ஐஸ்வர்யாவிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. பல படங்களில் நடித்திருந்தாலும் கோலிவுட்டில் சரியான இடம் அமையவில்லை. 1994ஆம் ஆண்டு தன்வீர் என்பவரை மணந்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். 1996ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட மன கசப்பால் முறையாக விவகாரத்து பெற்று அவரிடம் இருந்து விலகினார். மீண்டும் 2 வருடங்கள் கழித்து சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது, சின்னத்திரையிலும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவின் ஒரு சோகமான பக்கம் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ரோஜா. இப்படத்தில் முதலில் நடிகையாக ஒப்பந்தமானவர் ஐஸ்வர்யா தான். ஆனால், அதே நேரத்தில் ஐஸ்வர்யா வேறு ஒரு படத்திற்கு முன்பணம் வாங்கி விட்டாராம். இதனால், அவரது பாட்டி ருக்மணியே மணிரத்னம் வாய்ப்பை மறுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து, அஞ்சலி படத்தில் இரவு நிலவு பாடலுக்கு நடனமாட ஐஸ்வர்யாவிற்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், நடிகை லட்சுமி தன் சொந்த நிறுவனத்தில் மகளை நடிக்க வைக்க இருக்கிறேன் என அந்த வாய்ப்பையும் தள்ளி விட்டனர்.

ரோஜா வாய்ப்பை தவறவிட்டாலும் இவருக்கு மணிரத்னம் மற்றொரு வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். அவரது இயக்கத்தில் உருவான திருடா திருடா படத்தின் நாயகி வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. மேக்கப் டெஸ்ட் வரை எடுத்து விட்டனர். ஆனால், அதே நேரத்தில் இந்தி படத்தின் கால்ஷூட் பிரச்சனையால் இதையும் வேண்டாம் என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தட்டியது அனைத்தும் பெரிய வாய்ப்பு என தெரியாமலே திரைத்துறையில் சறுக்கலை சந்தித்து இருக்கிறேன் என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top