சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

3 படங்களில் மிகப்பெரிய லாபத்தை பார்த்த நிறுவனம்.. பிளடி பக்கரால் ஏற்பட்ட மோசமான நிலை

Kavin : இந்த தீபாவளி பண்டிகைக்கு கவினின் பிளடி பக்கர் படம் வெளியானது. லிஃப்ட், டாடா, ஸ்டார் என கவின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் ஒரு நல்ல பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் தான் பிளடி பக்கர்.

கவின், ரெடின் கிங்ஸ்லி, திவ்யா மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்த படம் போதிய அளவில் வரவேற்பை பெறவில்லை. நெல்சன் திலீப்குமார் தனது நண்பன் கவனுக்காக இந்த படத்தை தயாரித்திருந்தார். இது அவரது முதல் படமாகும்.

அறிமுக இயக்குனர் சிவபாலன் இந்த படத்தை இயக்கியிருந்த நிலையில் வசூல் எதிர்பார்த்த அளவு பெறவில்லை. இது நெல்சனுக்கு ஓரளவு அதிருப்தியை கொடுத்த நிலையில் மற்றொரு பிரபலம் பெறும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

பிளடி பக்கர் படத்தால் ஏற்பட்ட நஷ்டம்

அதாவது இந்த படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை 5 ஸ்டார் செந்தில் வாங்கி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 11 கோடிக்கு இந்த படத்தை வாங்கினார். இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான பார்க்கிங், சூரியின் கருடன் மற்றும் விஜய் சேதுபதியில் மகாராஜா போன்ற படங்களை விநியோகம் செய்தவர்.

இந்த மூன்று படங்களின் மூலம் இவருக்கு ஏற்கனவே நல்ல லாபம் கிடைத்தது. மேலும் கவினின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் பிளடி பக்கர் படத்தை நம்பி பெரும் தொகை கொடுத்து வாங்கி இருந்தார். ஆனால் இப்போது இந்த படம் மூன்று கோடி ஹேர் கிடைத்தாலே பெரிது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கு பிளடி பக்கர் படத்தின் மூலம் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அமரன் படம் இந்த படத்துடன் வெளியான நிலையில் பிளடி பக்கர் மேலும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. இல்லையென்றால் கூட நஷ்டம் பெறாமல் தப்பித்திருக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

Trending News