Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோ முக்கியமில்லை.. காசு கொடுத்தா கண்டபடி நடிக்கத் தயார்.. லாஸ்லியா அறிவிப்பால் திரளும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சம் இல்லை. அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களும் நாயகிகளாக களம் இறங்கி விட்டனர்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் லாஸ்லியா(losliya). இலங்கையில் ஒரு செய்தி சேனலில் தொகுப்பாளராக இருந்தவரை களமிறக்கியது விஜய் டிவி.
எதிர்பார்த்ததைப் போலவே இவரை பார்ப்பதற்கு என இளைஞர் பட்டாளம் படையெடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க தொடங்கியது. இதனால் விஜய் டிவியின் டி ஆர் பியும் பரபரவென ஏறியது.
தற்போது லாஸ்லியா இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். அந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அனைவரும் படவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் லாஸ்லியாவுக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன என மற்ற நடிகைகள் அவர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.
அதற்கு காரணம் லாஸ்லியா போட்டு உள்ள முக்கிய கண்டிஷன் தான். தனக்கு கதை மற்றும் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியமில்லை எனவும், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.
இதனால்தான் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு புது படத்தில் நடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியாவை அவரது ரசிகர்கள், இவர் கூட எல்லாம் ஜோடி போட்டு நடிக்கணுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
