பிக்பாஸ்-க்கு பிறகு கவினை பற்றி லாஸ்லியா வெளியிட்ட முதல் பதிவு.. கொண்டாடித் தீர்க்கும் கவிலியா ஆர்மி

பிக்பாஸ் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு செல்வதும் நட்பை வளர்ப்பதுமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பிக் பாஸ் இன் வெற்றியாளர் முகன், அபிராமி உடன் நாட்களை கழித்து வருவதும், கவின், சாண்டி, தர்ஷன் ஆகியோர் சாண்டியின் வீட்டிற்கு சென்று விருந்து கொண்டாடியது என சந்தோஷமாக நாட்களை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸில் மிகவும் பிரபலமான கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை என்னவாயிற்று என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஏக்கத்துடன் டுவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கவின் ஏன் இன்னும் லாஸ்லியாவை சந்திக்க வில்லை என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பதிவுகளை முன்வைத்து வருகின்றனர்.

அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் தொலைக்காட்சி மற்றும் கமலஹாசன் ஆகியோர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு கடைசியில் கேம் சேஞ்சர் என கவினை பற்றி தெரிவித்திருந்தார். இதனைக்கண்ட கவிலியா ஆர்மிகள் உற்சாகமடைந்து ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Comment