fbpx
Connect with us

Cinemapettai

காதலை நம்பி ஏமாந்தது போதும்.. கவினை மறைமுகமாக தாக்கும் லாஸ்லியா.. நீங்களா இப்படி?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதலை நம்பி ஏமாந்தது போதும்.. கவினை மறைமுகமாக தாக்கும் லாஸ்லியா.. நீங்களா இப்படி?

சினிமாவைப் பொறுத்தவரையில் காதலிப்பது பின்னர் காதலை விட்டு விட்டு வேறு வழியில் செல்வது என்பது ஒன்றும் புதிதல்ல.

அப்படித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதலித்து தற்போது அவர்கள் காதலை பெற்றவர்களுக்காக தியாகம் செய்துவிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால் அதில் உண்மை இல்லையாம். பிக் பாஸ் வீட்டில் இருவரும் சுதந்திரக் காதல் பறவைகளாக சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ் படத்தில் வரும் வில்லன் போல் உள்ளே நுழைந்து காதலைக் கெடுத்தார் லாஸ்லியாவின் தந்தை.

அதன் பிறகும் சில நாட்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் உடனடியாக பணக்கார வீட்டுப் பொண்ணு ஏழை பையனை தனது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என ரிஜெக்ட் செய்வதைப் போல தூக்கி எறிந்துவிட்டார் லாஸ்லியா.

அதன்பிறகு இருவரும் தனித்தனியே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதுவரையிலும் லாஸ்லியாவை பிரிந்ததாகவும் அவரின் மீது வருத்தம் இருந்தாலும் அதை கவின் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

ஆனால் லாஸ்லியா அதற்கு மாறாக அடிக்கடி ஏதாவது ஒரு பதிவில் கவினை மறைமுகமாக தாக்கிப் பேசி வருவதாக அவரது ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இருவர் காதலுக்கும் சப்போர்ட் செய்து அதே ரசிகர்கள் தான் தற்போது கவினை தரக்குறைவாக பேச வேண்டாம் என லாஸ்லியாவிடம் சண்டை போட்டு வருகின்றனர்.

அதற்கு காரணம் சமீபத்தில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் காதலித்ததால் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன் என்பதை போல பதிவிட்டிருந்தார்.

losliya-post

losliya-post

Continue Reading
To Top