பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நடிகையானார்.
பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாக்கியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
எப்போதும் நடிகைகள் முதலில் ரசிகர்கள் எதை சொன்னாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு பெரிய நடிகையாகிவிட்டாள் கொஞ்சம் பந்தா காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படித்தான் சமீபகாலமாக லாஸ்லியா ஒரு சில படங்களில் நடிகையாக நடிக்க கமிட்டாகியுள்ளதால் சற்று பந்தா காண்பித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளிவருகின்றன.
தற்போது ஏதோ ஒரு ரசிகர் கொரோனாவால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என்ன செய்வது என தெரியாமல் பலரும் பயத்தில் உள்ளனர். இப்படி இருக்கும்போது உங்களுக்கு போட்டோசூட் தேவையா என கேட்டுள்ளார். ஒரு நடிகை போட்டோ ஷூட் எடுப்பதாக இருந்தால் எப்படியும் சுற்றி 3, 5 பேர் இருப்பார்கள் என்பதால் அந்த ரசிகர் கேள்வியை கேட்டுள்ளார்.
இந்த ரசிகர் கேட்ட கேள்விக்கு லாஸ்லியா தயவு செய்து உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மூடி விட்டு செல்லுங்கள். பின்பு இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோக்கள் உங்களுக்கு வராது என பதில் அளித்துள்ளார். அதனால் லாஸ்லியாவை ரசிகர்கள் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.