தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நடிகையானார்.
பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாகியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் கூட லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளியில் பங்குபெற்ற அஸ்வின் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்தனர்.
லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் ஹர்பஜன் சிங் ஜோடியாக பிரண்ட்ஷிப் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இளம் நடிகைகளுக்கு படவாய்ப்பு வேண்டும் என்றால் தொடர்ந்து தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதைத்தொடர்ந்து செய்துவரும் லாஸ்லியா இந்த முறை கோட்டை விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சரியாக மேக்கப் போடாத புகைப்படத்தை வெளியிட்டதால் மீசையை சேவ் செய்துள்ளது போல் இருக்கிறது என ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர்.