Connect with us
Cinemapettai

Cinemapettai

kavin-losliya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்.. இரங்கல் கூட தெரிவிக்காத காதலர் கவின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் காதல் பறவைகளாக வலம் வந்தவர்கள் லாஸ்லியா மற்றும் கவின். இடையில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கவினுடனான காதலை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணம் அடைந்துள்ளது அனைவருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. நேற்றுதான் ஆசை ஆசையாக லாஸ்லியா தன்னுடைய சமூக வலைதளத்தில் தீபாவளியை பகிர்ந்து கொண்டார்.

அதற்குள் இப்படி ஆகணுமா என ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பத்து வருடங்களுக்கு பிறகு லாஸ்லியாவை அவரது தந்தை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா உடன் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

losliya-dad-cinemapettai

losliya-dad-cinemapettai

ஆனால் லாஸ்லியாவை காதலித்த கவின் இதுவரை எந்த ஒரு இரங்கலும் தெரிவித்ததாக தெரியவில்லை. சமூக வலைத்தளத்தில் ஒரு பேச்சுக்கு கூட எதுவும் சொல்லவில்லையே என கவிலியா ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

பெரும்பாலும் கவின், லாஸ்லியாவின் குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்திருப்பார் என அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Continue Reading
To Top