Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடித்த மூன்று படமும் வெளியாகவில்லை.. இருந்தாலும் சொத்துகளை குவிக்கும் லாஸ்லியா.. எப்படி?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி தொடர்பாளராக பணியாற்றியவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கியது விஜய் டிவி.
அவ்வளவுதான், இத்தனை நாட்கள் அவ்வளவு ரசிகர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியாத அளவுக்கு லாஸ்லியாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
பிக்பாஸ் வீட்டிலேயே மிகப்பெரிய புகழைப் பெற்ற லாஸ்லியா கண்டிப்பாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்த நேரத்தில் கைமேல் பலனாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
தற்போது மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை லாஸ்லியா நடித்த எந்த படமும் வெளியாக வில்லை என்பதும் கூடுதல் தகவல்.
இது ஒருபுறமிருக்க, லாஸ்லியா மளமளவென சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறாராம். ஒரு படம்கூட வெளியாகவில்லை, இருந்தாலும் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என ஆராய்கிறார்கள்.
லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே அவரது புகழுக்கு ஏகப்பட்ட சம்பளம் வாங்கிக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் தற்போது ஹீரோயினாக நடிக்கும் படங்களில் 15 முதல் 25 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.
படம் வெளியானதும் 50 லட்சமாக மாற்ற முடிவு செய்துள்ளாராம் லாஸ்லியா. வாய்ப்புகள் ஒருபக்கம், சொத்துகள் ஒருபக்கம் குவிந்து கொண்டே இருக்க லாஸ்லியா வேற லெவலில் செட்டிலாக இருக்கிறாராம்.
