திருப்பதி அருகே டீக்கடை மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை அடுத்த ஏர்பேடு கிராமத்தில் டீக்கடை மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேருந்துக்காக காத்திருந்தவர்கள் டீக்கடையில் அமர்ந்திருந்த போது வேகமாக வந்த லாரி டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.