தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படத்தில் மக்களைப் பாடாய்படுத்திய பல சமூக விஷயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘8 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு மருத்துவத்தை இலவசமாக அளிக்கும்போது, 28 சதவீதம் வசூலிக்கும் இந்தியா ஏன் மருத்துவத்தை இலவசமாகத் தரவில்லை?’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சியும் இடம்பெற்றுள்ளது.

mersal vijay
mersal vijay

இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ, திருநாவுக்கரசர் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அதிகம் படித்தவை:  ஃபோர்ப்ஸ் பத்திரிகை முதல் லோக்கல் பத்திரிகை வரை வெளியான விவேகம் முடிவு! போட்ட நெகடிவ் விமர்சனம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா போச்சு..!
mersal

இயக்குநர் பா.இரஞ்சித்தும், ‘இந்தக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை. மக்களிடம் இந்தக் கருத்துகளுக்கு வரவேற்பு உள்ளது’ என்று கூறினார். ஆனாலும், ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளரான முரளி ராமசாமி முடிவு செய்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் போன் மூலம் இந்தத் தகவலை முரளி தெரிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின.

தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

mersal

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்குள் எப்போதும் ஒருவகை சண்டை இருந்துக்கொண்டே இருக்கும், யார் படம் அதிக வசூல் என்பதில் தொடங்கி காரணமே இல்லாமல் அடித்துக்கொள்வார்கள்.

அதிகம் படித்தவை:  நான் அஜித்துடன் குரலில் மோதிவிட்டேன்.!பிரபல நடிகர் ஓப்பன் டாக்.!

தற்போது மத்திய கட்சி ஒன்று மெர்சல் படத்தில் GST வசனத்தை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றது, மேலும், விஜய்க்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றது.

ajith fans

இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்க்க, அஜித் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு மெர்சலுக்கு தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் “கன்னட நாயே, அடுசுகிட்டாலும் நாங்கதான் அடுச்சுப்போம், குறுக்க எவனையும் விட மாட்டோம்” தமிழன்டா..!” என்ற வசனத்தை தாங்கி நிற்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.