நடிகன்னு தயவுசெய்து ஞாபகப்படுத்துங்கள்.. வாய்ப்பு இல்லாமல் சித்தார்த் கையிலெடுத்த புது அவதாரம்

நிறைய நடிகர்கள் தொடர் தோல்வி படங்கள் அமைந்தால் பின்னர் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், சினிமாவில் இருந்து மறைந்து போய் விடுகின்றனர். ரசிகர்களும் அவர்களை மறந்து போகின்றனர். இதனை நன்கு அறிந்துள்ள தற்போதைய நடிகர்கள் சில படங்கள் தோல்வி அடைந்தால் பின் ஒரு சொந்த படம் எடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கின்றனர். இது சிலருக்கு கைகூடாமல் போயும் விடுகிறது.

தற்போது இந்த பாணியை தான் நடிகர் சித்தார்த் கையில் எடுத்துள்ளார். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலைக்காட்டி வந்தார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படங்கள் தான் பின்னர் தமிழில் சம்திங் சம்திங் எனவும் சந்தோஷ் சுப்பிரமணியம் எனவும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது.

ஆனால் சில காலங்களாக இவர் நடித்த தெலுங்கு படங்கள பெரிதாக ஓடாததால் மீண்டும் தமிழில் முயற்சித்தார். ஆனால் தமிழிலும் பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. பின்னர் ஹீரோ ரோல்களில் இருந்து சில படங்களில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முயன்று பார்த்தார். அதுவும் பெரிதாக கைக்கூடவில்லை. இன்னிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சொந்த படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண் குமாரை இந்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார் சித்தார்த். அருண் குமார் விஜய் சேதுபதியுடன் இணைந்து சேதுபதி மற்றும் சிந்துபாத் என மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார்.

நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருக்கும் சித்தார்த், இந்த படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும். இல்லையேல் ரசிகர்கள் என்னை மறந்து விடுவார்கள் என கூறி இயக்குனர் அருண் குமாருக்கு அழுத்தமும் கொடுத்து வந்துக்கொண்டிருக்கிறார். கடைசி முயற்சியாக இதில் இறங்கியுள்ள சித்தார்த் வெற்றி அடைவாரா? என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்.

அருண்குமார் ஏற்கனவே விஜய் சேதுபதிகாக ஒரு படத்தை இயக்க உள்ள நிலையில் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் முதலில் சித்தார்த் படத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளார்.அருண் குமார் மீண்டும் நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையவுள்ள படம் இந்த படத்தால் தள்ளி போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்