Connect with us
Cinemapettai

Cinemapettai

london-honeymoon

India | இந்தியா

ஹனிமூனுக்கு கூட போன மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்.. அதிர்ச்சி

லண்டன்: ஹனிமூனுக்கு மகளுடன் கூட போன மாமியார் கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது தாயே தன் கணவரை அபகரித்து விட்டதை எண்ணி மகள் குமுறி வருகிறார். தம்பதிக்கு இப்போது குழந்தையும் இருக்கிறதாம்.

இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் அந்த இளம் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை மீடியாக்களில் தெரிவித்துள்ளார். தென் மேற்கு, லண்டனை சேர்ந்தவர் லாரன் வால். 34 வயது பெண்.

இவருக்கு 19 வயதாக இருந்தபோது, பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பால், ஏர்போர்ட் ஊழியராக பணியாற்றியவர். லாரனுக்கு தாய் மட்டும்தான், தந்தை இல்லை. லாரன்-பால் ஒயிட் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி வைத்து சந்தோஷப்பட்டுள்ளார், லாரனின் தாய் ஜூலி. £15,000 செலவு செய்து, இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார்.

இதன்பிறகு லாரன் வால் மற்றும் பால் ஒயிட் ஹனிமூனுக்கு தேவோன் பகுதிக்கு கிளம்பியுள்ளனர். அதும் ஒரு நாள், இரு நாளல்ல, 2 வாரங்கள் நீண்ட ஹனிமூன் அது. இத்தனை நாள் தனது தாயை பிரிந்து இருந்ததில்லையாம் லாரன். மேலும் தந்தை இல்லாமல் தாய் வீட்டில் தனியாகத்தானே இருப்பார், அதனால் தன்னுடனே ஹனிமூனுக்கு கூட்டிச் செல்லலாம் என லாரன் நினைத்துள்ளார்.

ஹனிமூனுக்கு துணை

இதுபற்றி ஜூலியிடமும் சொல்லியுள்ளார். “சின்னஞ்சிருசுங்க.. சந்தோஷமா இருங்க.. நான் எதற்கு நடுவுல..” என முதலில் மறுத்துள்ளார் ஜூலி. ஆனால், லாரன் மற்றும் பால் இருவரும் தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு வழியின்றி, மகளின் ஹனிமூனுக்கு துணைக்கு போயுள்ளார் ஜூலி. ஹனிமூன் போன இடத்தில் மாமியார் ஜூலியுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துள்ளார் பால். ஹனிமூன் சென்று திரும்பிய பிறகுதான் லாரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

லாரனின் சகோதரி, தனது தாய் செல்போனை எடுத்து யதேர்ச்சையாக பார்த்தபோது, பால் மற்றும் ஜூலி நடுவேயான ஆபாச உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போயுள்ளார். ஆபாச விஷயங்களை பேசி இருவரும் ஜாலியாக இருந்துள்ளதை பார்த்து லாரன் சகோதரிக்கு தலை சுற்றிப்போனது.

உடனே இதுபற்றி லாரனிடம் சொல்ல, அவரும் கிறுகிறுத்துப் போயுள்ளார். லாரனுக்கும் பாலுக்கும் 2004 மார்ச் மாதம், பெண் குழந்தை பிறந்தது. இதன்பிறகுதான் இவர்கள் திருமணம் செய்தனர். அந்த பெண் குழந்தைக்கு 7 மாதங்கள்தான் ஆன நிலையில், திடீரென பால் தனது திருமண மோதிரத்தை கழற்றிவிட்டு, ஜூலி வீட்டுக்கே போய் குடியேறிவிட்டாராம்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, ஜூலி அடுத்த 9வது மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆம். மருமகன் பால்தான் அந்த குழந்தையின் தந்தை. தான் உயிருக்கு உயிராக நம்பிய இரு உறவுகளும் சேர்ந்து கொண்டு, தனக்கு துரோகம் இழைத்ததை நினைத்து இப்போதும் வருந்துகிறார், லாரன்.

தன்னை திருமணம் செய்து கொண்ட 5 வருடங்கள் கழித்து தனது தாயை தனது கணவர் கல்யாணம் செய்துகொண்டார் என்று லாரன் கண்ணீருடன் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top