fbpx
Connect with us

Cinemapettai

லாக் டவுனில் தேடிப்போய் உதவும் லொள்ளு சபா சேஷு! ரியல் ஹீரோ ஒய் நீ

Tamil Nadu | தமிழ் நாடு

லாக் டவுனில் தேடிப்போய் உதவும் லொள்ளு சபா சேஷு! ரியல் ஹீரோ ஒய் நீ

லொள்ளு சபா – 90 ஸ் கிட்ஸின் பாவரிட் நிகழ்ச்சி. சினிமாவை கலாய்த்து அதான் வாயிலாக சினிமாவில் நுழைந்து பிரபலமாக மாறியவர்கள் இந்த கூட்டம். சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், மனோகர், பாலாஜி என சொல்லிகொண்டே செல்லலாம்.

இவர்களில் சேஷு இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவரும் இவர், இந்த கொரோனா காலகட்டத்தில் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார். அதோடு நில்லாமல் தனது இருசக்கர வாகனத்தில் மைக் வைத்து வீதி, வீதியாகச் சென்று தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை பரப்பி வருகிறார்.

இவரின் இந்த முயற்சிக்கு முகநூல் நண்பர்கள்தான் பக்கபலமாக செயல்படுகிறார்களாம். முதலில் வீட்டின் காம்பவுண்டிக்கு அருகில் உள்ள 15 குடும்பங்களுக்கு அரிசி, பருப்புன்னு தேவையான மளிகைப் பொருட்க்களை வாங்கிக் கொடுத்தாராம். கைக்குழந்தை இருந்த  வீட்டுக்கு மூணு மாசத்துக்குத் தேவையான பாலுக்குக் காசு கொடுத்திருக்கிறார். அப்பொழுது சேஷுவின் வேண்டுகோளை ஏற்று ரஜினி ரசிகர் மன்றத்தினரும், நடிகர் யோகிபாபுவும் இந்த உதவிகளை செய்துள்ளனர்.

lollu sabha seshu helping

மேலும் பேஸ் புக் நண்பர்கள் மற்றும் சந்தானம் சந்தானம் ரசிகர் மன்றமும் கொடுத்த பணத்தை வைத்து அரிசி மூட்டைகளை வாங்கி அதனை மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்து உதவியுள்ளார்.

இந்த இக்கெட்டான சூழலில் ஆன்லைன் வகுப்புக்கு குழந்தைகளுக்கு செல்போன் தேவை, ஆனால் எல்லா பெற்றோருக்கும் செல்போன் வாங்கிக்கொடுக்கும் சாத்தியம் இல்லை. முகநூல் நண்பர்கள் மூலமாக பழைய செல்போனை பெற்றுக்கொண்டு, அதைத் தேவையுள்ளவர்களிடம் கொண்டுபோய் கொடுத்துள்ளார்.

பல நல்ல உள்ளங்களின் உதவியோடு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்.

Continue Reading
To Top