Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

பிரபுதேவா கிடையாதாம்- கமலின் விக்ரம் பட வில்லன் எந்த மாஸ் ஹீரோ தெரியுமா?

கோயம்புத்தூரை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். காலேஜ் முடித்த பின்பு பேங்க் வேலையில் சேர்ந்தார். எனினும் சினிமா மீது இருந்த தீராத காதல் காரணமாக குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தார். 2016ல் இவரது குறும்படம் காலம், அவியல் என்ற ஆந்தாலஜி தொகுப்பில் வெளியானது. அதன் பின்னர் மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட் ட்ரிக் வெற்றி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கமலின் வெறித்தனமான ரசிகன். அவர் படங்கள் தான் இவர் சினிமாவுக்கு வர இன்ஸபிரேஷன் என்பதும் நாம் அறிந்தது தான். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் அவர்களை வைத்து விக்ரம் படத்தை அடுத்து இயக்க உள்ளார். ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடக்கிறது, தேர்தல் முடிந்த பின் ஷூட்டிங்.

கமல் தயாரிப்பில் ரஜினிக்காக ரெடியான கதை, ஆனால் கமல் அவர்கள் நடிப்பதாக உருவெடுத்த ப்ரொஜெக்ட் இது. இந்த காங்ஸ்டர் ஸ்டைல் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மாஸ்டர் படம் போலவே பவர்புல் கதாபாத்திரமாம். இந்த ரோலில் நடிக்கப்போவது யார் என பல பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி பாஹத் பாசில், பிரபுதேவா என சொல்லப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தை நடந்தது என்னவோ உண்மை தானம்.

இந்நிலையில் தற்பொழுது விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

raghava lawrence

raghava lawrence

கட்டாயம் இந்த முறை உறுதியாகி விடும் என்கின்றனர் கோலிவுட் பட்சிகள். பக்கா மாஸ் தான் அப்போ.

Continue Reading
To Top