வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பெரியதலைக்கு வலை விரித்திருக்கும் லோகேஷ்.. கனவு கைகூடுமா.?

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிப் படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். ஒரு மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்த படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்காக பலமடங்கு உழைப்பை போட்டு இமாலய வெற்றி படத்தை கொடுத்த ரசிகர்களை வாயடைக்கச் செய்து விடுகிறார்.

சினிமாவில் உள்ள நுணுக்கங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மிகக்குறுகிய காலத்திலேயே லோகேஷ் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் படத்தில் இறக்கி வெற்றிபெறச் செய்து விடுகிறார். இதனால் லோக்கேஷன் படத்தில் நடிக்க பல நடிகர்களும் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கமலஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 67 வது படத்தை இயக்கயுள்ளார். இதற்கான வேலையில் தற்போது முழுவீச்சில் இறங்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பங்கு பெற்ற பேட்டியில் எந்த நடிகர் படத்தை இயக்க ஆசை என கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், எல்லா நடிகர்களின் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. ஆனால் அதற்கு காலமும், நேரம் தான் முடிவு செய்யும் என கூறியிருந்தார்.

அதிலும் குறிப்பாக அஜித் மற்றும் ரஜினிகாந்த் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியிருந்தார். அதாவது ரஜினிக்கு இணையாக உள்ள கமலஹாசனின் படத்தை லோகேஷ் இயக்கிவிட்டார். அதேபோல் அஜித்துக்கு இணையாக உள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தை லோகேஷ் இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

இதனால் தற்போது இந்த இரண்டு பெரிய தலைகளுக்கு வலை விரித்துள்ளார். இந்தக் கூட்டணியில் படம் வெளியானால் கண்டிப்பாக வேற லெவல் தான் இருக்கும். ஆனால் லோகேஷ் சொன்னதுபோல காலமும், நேரமும் சரியாக வந்தால் கண்டிப்பாக இவர்களது கூட்டணியில் படம் வெளியாகும்.

- Advertisement -

Trending News