ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

கடவுள் போல் ஸ்கெட்ச் போட்டு ரஜினியை காப்பாற்றிய லோகேஷ்.. அனிருத்தின் நுங்கை பிதுக்கிய லோக்கி

கூலி பட ஷூட்டிங்கில் ரஜினிக்கு ஏற்பட்ட முதுகு வலி காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்து குணப்படுத்திய டாக்டர்கள் இன்று டிஸ்டார்ஜ் செய்கின்றனர். குறைந்தது 40 நாட்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர்.

இதற்கிடையில் ரஜினியின் வயது காரணமாகவும், தொடர் வேலைப்பளு காரணமாகவும் ஒரு மாத காலம் ஓய்வு முடிவை அவரே எதிர்நோக்கி கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்தது போல் லோகேஷ் செய்ததுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷ் ரஜினிக்கு ஏற்றவாறு ஷெட்யூல் அமைத்து ஷூட்டிங் நடத்தி வருகிறார். அதாவது இந்த டைம் அவருக்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும். அதன் பின் மீண்டும் இந்த நேரத்தில்தான் அவரால் இதை செய்ய முடியும் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மருத்துவர் போல் டைம்டேபிள் போட்டு உள்ளார்.

அனிருத்தின் நுங்கை பிதுக்கிய லோக்கி

லோகேஷ் போட்ட டைம் டேபிளால் ஷூட்டிங்கிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லையாம். ரஜினி இல்லாத பாகங்களை இப்பொழுது எடுத்து வருகிறார். ஏற்கனவே ரஜினிக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் தான் இது. அதனால் அவருடைய இல்லாமை கூலி படத்தை பெரிதும் பாதிக்கவில்லையாம்.

இப்பொழுது லோகேஷ் அனிருத்தின் நுங்கை பிதுக்கி வருகிறார். இரண்டு பேரும் ஹைதராபாத்தில் இருக்கின்றனர். ரஜினி ஓய்வு எடுப்பதால், எப்பொழுதுமே டகால்டி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அனிருத்தை பிடித்து உட்கார வைத்திருக்கிறார் லோகேஷ். தற்சமயம் அனிருத் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ஓய்வின்றி வாங்கிக் கொண்டிருக்கிறார் லோக்கி.

- Advertisement -spot_img

Trending News