Connect with us

Photos | புகைப்படங்கள்

செம மாஸாக லியோ உடன் போஸ் கொடுத்த லோகேஷ்.. இணையத்தில் காட்டு தீயாக பரவும் புகைப்படம்

லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து லயன் விஜய், லோகேஷ் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவுகிறது.

lokesh-vijay-1

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தைக் குறித்த அப்டேட் ஒவ்வொரு நாளும் சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கிறது.

இதில் விஜய் உடன் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தை சேர்ந்த லலித் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read: திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த குடும்பம்.. லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

இருப்பினும் கடும் குளிர் காரணமாக படத்தின் முக்கிய காட்சிகள் மட்டுமே படமாக்கப்படுகிறதாம். படத்தின் கதாநாயகி திரிஷா கொட்டுகிற பனியில் வெளியிட்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு லயன் விஜய், லோகேஷ் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவுகிறது.

இந்தப் புகைப்படத்தில் விஜய் ரொம்பவே சிம்பிளாக இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான லைக்களையும் ஷேர்களையும் குவிக்கிறது. இப்படி வாரத்துக்கு ஒரு போட்டோ ரிலீஸ் பண்ணுங்க போதும் என்று தளபதி ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

செம மாஸாக லியோ உடன் போஸ் கொடுத்த லோகேஷ் புகைப்படம்

lokesh-vijay-cinemapettai

lokesh-vijay-cinemapettai

Also Read: லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

Continue Reading
To Top