கைதி, விக்ரம் படத்திற்கு இவ்வளவு ஒற்றுமையா.. திட்டம் தீட்டி செயல்பட்ட லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ரம் படம் நாளை திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் அதற்காக சினிமா ரசிகர்கள் வெறிகொண்ட காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படத்தையும், அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடிப்பில் வெளியான பக்கா மாஸ் திரைப்படமான கைதி திரைப்படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது.

தற்போது வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தை குறித்த தகவலை வைத்துப்பார்த்தால் கைதி படத்திற்கும் விக்ரம் படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கிறதா என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கைதி படத்தில் நரேன் நடித்திருக்கும் கதாபாத்திரம் இன்ஸ்பெக்டர் பிஜாய்  கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்,

தற்போது நரேன் மீண்டும் அதே இன்ஸ்பெக்டர் பிஜாய் கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோன்று கைதி படத்தில் வில்லனாக மிரள விட்ட அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்திலும் அதே அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் படத்தில் அன்புவின் கதாப்பாத்திரம் தனித்துவமாக லோகேஷ் காட்டியிருப்பார்.

இவர்கள் இருவர் மட்டும் அல்லாமல் ஹரிஷ் உத்தமன் கைதி படத்தில் அடைக்கலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது போல் விக்ரம் படத்திலும் அடைக்கலம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரால் தான் கைதி படத்தின் கதையை நகர்வதால் அடைக்கலம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் விக்ரம் படத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இப்படி கைதி படத்திலிருக்கும் மூன்று கதாபாத்திரத்தினை அப்படியே லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி முடித்து திரைக்கு காத்திருக்கும் விக்ரம் படத்தில் கொண்டு வந்ததால், யாரும் சொல்லித்தான் தெரியனும் என்கின்ற அவசியம் இல்லாத அளவுக்கு விக்ரம் படம் கைதி 2 போன்றே தெரிகிறது.

இதன்பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமலஹாசனுடன் அடுத்த படத்திலும் இணைய இருப்பதால்  அந்த படம் நிச்சயம் கைதி 3 ஆகவே எடுக்கப்படும். இப்படி விக்ரம் படத்தில் கைதி கதாபாத்திரத்தை அப்படியே கொண்டுவந்து இருப்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில் நாளை ரிலீசாகும் படத்தை குறித்து கூடுதல் ஆர்வத்துடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்