Connect with us
Cinemapettai

Cinemapettai

ரெடியாகிறது விஜய் சேதுபதியின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. சிரிப்பு கலவரம் என பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரெடியாகிறது விஜய் சேதுபதியின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. சிரிப்பு கலவரம் என பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

விஜய் சேதுபதி இன்று தமிழக மக்களின் மனதில் தனக்கென சிம்மாசனம் அமைத்து ராஜாவாக அமர்ந்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். தமிழ் சினிமா என்ற லிமிட்டை கடந்துவிட்டார் மனிதர்.

ஆரம்ப நாட்களில் இவருக்கு நல்ல பிரேக் த்ரூ அமைத்து கொடுத்தது, ‘ இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படம். படத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் எல்லாம் இப்போதும் மீம்ஸ்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இயக்குனர் கோகுலின் கை வண்ணத்தில் ரெடியான படம். அதன் பின்னர் இந்த கூட்டணி ஜூங்கா படத்திலும் இணைந்து கலக்கினார்.

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலம் spin off படங்களை எடுப்பது. அந்த ஸ்டைலில் கோகுல் ரெடி செய்துள்ள படம் தான் “கொரோனா குமார்”. சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பில் சதிஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றிய விவரம் இன்னமும் வெளியாக வில்லை.

இந்நிலையில் “இப்படத்தின் கதையை கேட்ட பின்பு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. சிரிப்பு கலவரம் இப்படம். வெள்ளித்திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஆல் தி பெஸ்ட்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் இயக்குனர் .

விஜய் சேதுபதி தான் ஹீரோ என்கின்றனர் ஒரு சிலர். ஆனால் மற்றோரு க்ரூப் சேது கெஸ்ட் ரோலில் நடிக்கிறார், ரோபோ ஷங்கர் தான் ஹீரோ என கிசு கிசுத்து வருகின்றனர்.

lokesh kanakraj tweet

காத்திருப்போம் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top