புகழ் போதை சிறிதும் இல்லாத லோகேஷ் கனகராஜ்.. விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்து வருகிறது.

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம் இப்போது அந்த ஆர்வத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளது. கமலுக்கு வயதாகி விட்ட காரணத்தினால் அதற்கு ஏற்றவாறு கதைக்களத்தை அமைத்து அவரை மாஸாக காண்பித்துள்ள இயக்குனருக்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு எதுவுமே நடக்காதது போன்று மிகவும் இயல்பாக பேசும் லோகேஷ் கனகராஜ் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் உங்களுக்கு தோல்வி பயம் இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஒரு திரைப்படத்தின் வெற்றி, தோல்வி என்பது படத்தில் பணிபுரியும் டெக்னீசியன்கள் உட்பட அனைவரையும் சார்ந்தது. அந்த வகையில் எனக்கு நிச்சயம் தோல்வி பயம் இருக்கிறது. ஏனென்றால் இன்று இந்த இடத்திற்கு வர முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் எத்தனையோ உதவி இயக்குனர்கள் இருக்கின்றார்கள்.

அந்த வகையில் எனக்கு கிடைத்த இந்த இடத்தை நான் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் 2000 ரூபாய் சம்பாதிக்கும் மக்கள் கூட 200 ரூபாய் பணத்தை ஒரு படத்திற்காக ஒதுக்குகிறார்கள். அப்படி என்றால் அதற்கான பலனை நாம் கொடுக்க வேண்டும் என்ற பயமும் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த தன்னடக்கமான பேச்சு பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் அந்த புகழ் போதை சிறிதும் இல்லாமல் இயல்பாகப் பேசும் லோகேஷை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

ஒரு திரைப்படம் வெற்றி அடைந்து விட்டாலே அந்த தலைகணத்தில் ஆடும் மற்ற இயக்குனர்களுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இவ்வளவு எதார்த்தமாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்