மாஸ்டரில் என்னோட பங்கு 50% தான்.. தளபதி 67-ல் வேற லெவல் சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்

லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மீண்டும் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நம்ப முடியாத சில விஷயங்கள் இருந்ததால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனால் விஜய் மாஸ் படங்களை தவிர்த்து விட்டு சென்டிமென்ட் படத்தில் நடிக்கலாம் என்று யோசித்து வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்நிலையில் இதுபற்றி சில சுவாரஸ்யமான விஷயங்கள் லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

அதாவது மாஸ்டர் படத்தை இயக்கும்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் மட்டுமே வெளியாகி இருந்தது. அதே போல் விஜய்க்கும் ஒரு மாஸ் ஆடியன்ஸ் உள்ளனர். இதனால் தன்னுடைய 100 சதவீதத்தையும் மாஸ்டர் படத்தில் திணிக்க முடியாது. இதனால் லோகேஷ் இன் 50 சதவீத படமாகும், விஜய்யின் 50 சதவீத படமாகவும் மாஸ்டர் படம் இருந்தது.

ஆனால் அதன்பிறகு கைதி படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாஸ்டர் படமும் வெளியாகி வசூலில் வேட்டையாடியது. இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனால் தற்போது தளபதி 67 படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். ஏனென்றால் விஜய் சாருக்கு இப்போது என்னை பற்றி தெரியும், எனக்கு விஜய் சாரை பற்றி தெரியும், மேலும் விஜய் ரசிகர்கள் இப்போது எதை எதிர்பார்க்கிறார்கள் என்றும் எனக்கு தெரியும்.

மேலும் 6 மாதத்தில் படத்தை எடுத்து முடிக்கவும், தன்னுடைய 100 சதவீதத்தையும் இப்படத்தில் போட உள்ளதாக லோகேஷ் கூறியுள்ளார். மேலும் மாஸ்டர் படத்தைவிட கண்டிப்பாக ஒரு படி மேலாக தான் தளபதி 67 இருக்கும் என லோகேஷ் உறுதியளித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story

- Advertisement -