உச்சகட்ட டென்ஷனில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்.. அனிருத் செய்த தில்லாலங்கடி வேலை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது திரையுலகில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. கமல் ரசிகர்கள் உட்பட பலரும் இந்த திரைப்படத்தை காணும் ஆவலில் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இந்த படத்திற்கான ரிசர்வேஷன் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 4 மணி காட்சிக்கான ரிசர்வேஷன் அனைத்தும் முடிந்துவிட்டது. இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்த நிலையில் அதற்கு அடுத்தடுத்த ஷோவுக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதனால் படக்குழு தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றது.

மேலும் இப்படத்தை உதயநிதியின் நிறுவனம் வெளியிட இருப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனைத்து விஷயங்களும் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படி விக்ரம் திரைப்படத்தின் வியாபாரம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டும் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார்.

இதற்கு காரணம் படத்தின் இசையமைப்பாளரான சின்னதம்பி அனிருத் தான். அவர் பாடல் சம்பந்தப்பட்ட சில வேலைகளை இன்னும் முடித்து கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டே இருக்கிறாராம். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இப்படி ஒரு பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் லோகேஷ் கனகராஜ் திணறி கொண்டிருக்கிறாராம்.

ஒட்டுமொத்த திரையுலகமே விக்ரம் திரைப்படத்தை திருவிழாபோல் கொண்டாட காத்திருக்கும் நிலையில் அனிருத் செய்த குளறுபடியால் மொத்த படக்குழுவும் தற்போது அப்செட்டில் இருக்கிறது. பொதுவாக அனிருத் எல்லா திரைப்படங்களுக்கும் இப்படி தான் கடைசி நேரத்தில் ஒரு டென்ஷனை ஏற்படுத்துவார்.

இப்படி அவர் இழுத்தடித்தாலும் கடைசி நேரத்தில் எல்லாம் பக்காவாக முடித்துக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் தற்போது படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் லோகேஷ் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமையில் தான் இருக்கிறார்.

Next Story

- Advertisement -