எப்படி இருந்த என்ன, இப்படி மாத்திட்டீங்க லோகேஷ்.. மனம் திறக்கும் விக்ரம் பட ஏஜென்ட் டீனா

எனக்கு திரையரங்கில் இவ்வளவு கைத்தட்டல்கள் வரும் என்று நான் சற்று கூட நினைத்துப் பார்க்க வில்லை என விக்ரம் திரைப்படத்தில் நடித்த குழு நடனக்கலைஞர் வசந்தி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று வரும் நிலையில், நடனக்கலைஞர் வசந்தி இத்திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசனின் மருமகளின் குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியாக காளியம்மாள் கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருப்பார். ஆனால் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் அதிரடி காட்டி, ஃபோனை எடுத்து ஏஜென்ட் தீனா ஹியர் என சொல்வார்.

அப்போது திரையரங்கமே ஒரு நிமிடத்தில் கைத்தட்டலில் ஆர்ப்பரிக்கும். இந்நிலையில் இக்கதாபாத்திரத்தை பற்றி பேசிய வசந்தி, நான் ஒரு பின்னணி நடன குழு கலைஞராக பல திரைப்படங்களில் பணியாற்றி உள்ளதாகவும், மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய போது லோகேஷ் கனகராஜ் தன்னிடம் அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்து நடிக்க கூறியபோது, தனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் 16 நாட்கள் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றியதாகவும், 3 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே ஷூட்டிங் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால நடன கலைஞராக இருந்த என் வாழ்க்கையில், இப்படி ஒரு பேராதரவு ரசிகர்களிடம் கிடைக்கும் என்று தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் இதற்கு லோகேஷ் கனகராஜிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் தனது காட்சிகள் எதுவுமே கட் செய்யப்படாமல் அப்படியே திரைப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் வசந்தி தெரிவித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்